சமயங்கள் கடந்த சரித்திரம்...
மண்ணோடு கலந்த வழிபாடு நிறுவனமயப்பட்ட சமயங்களின் வருகைக்கு முன்பே, இயற்கையின் ஆற்றலையும் முன்னோர்களின் தியாகத்தையும் போற்றித் தொழுத தமிழ்க்குடியின் தொன்மை அடையாளம் அய்யனார். தமிழகத்தின் ஏரிக்கரைகளிலும், ஊர் எல்லைகளிலும் நிலைபெற்றுள்ள இந்தத் தொல் மரபு,வெறும் ஆன்மீகச் சடங்கல்ல; அது தமிழர்களின் வீரம், ஈரம் மற்றும் சமூகக் கட்டமைப்பின் ஆவணச் சாட்சி.
தொண்டை மண்டலம் முதல் தாமிரபரணி வரை பரவிக் கிடக்கும் வழிபாட்டு முறைகளைத் தொல்லியல், இனவரைவியல் மற்றும் இலக்கியத் தரவுகளுடன் ஒரு வரலாற்றுப் பயணமாக இந்நூல் விவரிக்கிறது.
Be the first to rate this book.