ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக, பத்திரிகையாளராக, ஊடகவியலாளராக பல்வேறு துறைசார்ந்த எத்தனையோ ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.அந்த சந்திப்பில் முகிழ்த்த உரையாடல்களின் பதிவுகளே இவள் சந்தித்த இவர்கள்.
வாசிப்பு மட்டுமல்ல பயணமும் மனித மனங்களைப் பக்குவப்படுத்தும். அதுபோல ஏதேனும் ஒரு துறையில் ஆளுமையாக இருக்கக்கூடிய சிலருடன் உரையாடுவதும் நமக்குள் பல திரைகளை விலக்கி இதுவறை அறிந்திராத கோணங்களில் வாழ்க்கையை அணுகக் கற்றுத் தரும்.
மேர்காணலின்போது ஒருவரைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்துடனும், அவர்களது வாழ்வில் சந்தித்த சவால்களை அவர்கள் எதிர்கொண்டவிதத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடனும், தாங்கள் கடந்துவந்த பாதையின் பயணம் சுகமானதாகவோ, சுமையானதாகவோ எப்படி இருந்தாலும் அதனைத் திரும்பிப் பார்த்து ஆசுவாசத்துடன் அதைப் பகிர்ந்துகொள்ளக் கோரும் மனப்பான்மையுடனுமே எனது நேர்காணல்களை அமைத்திருக்கிறேன்.
Be the first to rate this book.