வாரிசுரிமைக் கல்வியின் முக்கியத்துவம்:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்- குர்ஆனையும் பாகப்பிரிவினைக் கல்வியையும் கற்றுக்கொள்ளுங்கள். மக்களுக்கும் கற்றுக்கொடுங்கள் ஏனெனில் (மரணத்தின் வானவரால்) என் உயிர் கைப்பற்றப்பட இருக்கிறது.
அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி), ஜாமிஉத் திர்மிதி)
தாய் - தந்தையின் பாத்தியதை:
குர்ஆன் கூறுகிறது- மரணித்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால். அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒருபங்கு உண்டு. அவருக்குப் பிள்ளைகள் இல்லாமல் தாய்-தந்தை மட்டுமே இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒருபங்கு உண்டு. மரணித்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு உண்டு. (அத்தியாயம் 4 வசனம் 11)
Be the first to rate this book.