ஒரு முஸ்லிம் நல்ல ஒழுக்கத்தின் நடுநாயகமாக விளங்கிட வேண்டும். அன்பின், நல்ல பண்பின் உறைவிடம் முஸ்லிம், இரக்கக் குணம் இஸ்லாமியர்களின் இதயத் தூய்மையின் வெளிப்பாடு. நல்ல பண்பே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும், விளக்கு. பண்பாட்டுத் துறையில் பண்பட்டால்தான் முஸ்லிம்களின் இறைநம்பிக்கை என்ற ஈமான் நிறைவு பெறும். இதுவே இம்மையிலும், மறுமையிலும் வெற்றியைப் பெற்றுத் தரும்.
வேதனைக்குரிய வகையில் இன்று முஸ்லிம்களின் ஒழுக்கம் தரத்தில் தாழ்ந்துகொண்டிருக்கின்றது. பாரம்பரியம் பாரம்பரியமாக அவர்கள் கொண்டிருந்த நல்ல பண்பாட்டில் பல ஓட்டைகள் விழுந்துவிட்டன. இன்று உலக அரங்கில் அவர்கள் ஏளனத்திற்கு உரியவர்களாக ஆகிவிட்டார்கள். காரணம், அவர்கள் தங்கள் பொன்னரிய பண்பாட்டைக் கோட்டை விட்டு விட்டார்கள். இந்தத் திசையில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவர விழைந்தேன். அந்த முயற்சியில் முகிழ்ந்ததே இந்நூல்.
இன்றைய முஸ்லிம்களுக்கு அவர்களுக்கே உரித்தான உயர்ந்த ஒழுக்கங்களை உணர்த்த திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றையே அடிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளேன். இந்த இருபெரும் செல்வங்களைப் பின்பற்றியே இந்நூலை ஆக்கியுள்ளேன்.
Be the first to rate this book.