பண்டைய காலங்களைப் போன்று நமது வீடுகளில் தூக்கத்தின்போது கதை சொல்லும் பாட்டிமார்களைக் காணவில்லை. தங்கள் அனுபவங்களைப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் தாத்தாமார்களும் மறைந்துவிட்டனர். வீதிகளில் துள்ளிக்குதித்து விளையாடும் சிறுவர், சிறுமியரும் அரிதாகிக்கொண்டே வருகிறார்கள். ஈருடல் ஓருயிர் என அன்பு காட்டும் தம்பதிகள் அரிதாகிவிட்டனர். பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசும் வெற்றுடல்கள் அதிகரித்துவிட்டன.
காரணம்? குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது. இத்தகையப் போர்களில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை, இரத்தமும் சிந்தப்பட மாட்டாது. மாறாக, கத்தியின்றி இரத்தமின்றி போர் தொடுக்கப்படுகிறது. ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள். அவர்களை அறியாமலேயே அந்த சிந்தனைக்கு அடிமையாகின்றார்கள்.
ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.