பெரியார், வாழ்நாள் முழுக்க மதங்களை எதிர்த்து, கடவுளை மறுத்து தீவிர நாத்திகம் பேசிய ஒருவர் என்றே ஆதரவாளர்களாலும் எதிர்ப்பவர்களாலும் புரிந்துகொள்ளப்படுகிறார்.
அதே பெரியார், இன இழிவு நீங்க இஸ்லாமே வழி என்றும் சொல்லியிருக்கிறார். எனில், முரணில்லையா? உண்மையில் இஸ்லாம் பற்றிய பெரியாரின் பார்வைதான் என்ன?
இக்கேள்விக்கு எதிரும் புதிருமான பதில்கள் வழங்கப்படுகின்றன.
எதற்குப் பிரச்சினை? பெரியாரிடமே கேட்டுவிடுவதுதான் நம்பகமானது.
அதற்காக, இஸ்லாம் பற்றி பெரியார் எழுதியுள்ள, பேசியுள்ள அனைத்தையும் அரிதின் முயன்று தொகுத்து, ஓர் முழுச் சித்திரத்தை வழங்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.