சிகரம் காலாண்டிதழின் விருது பெற்ற நூல்:
எதையும் வெறும் ஒற்றைப் பார்வையில் கடந்துவிடாமல், நின்று. நிதானித்து, ரசித்து, கவிப்பார்வையால் உள்வாங்கும் பாங்கு கவிஞர் சுபி. முருகனின் கவிதைகளில் இயல்பாக கைகூடியுள்ளன. கவிஞர் கபி முருகனின் ஹைக்கூ கவிதைகள், இந்த சமூகத்தை, மனித வாழ்வை உயிர்ப்புடன் மொழி பெயர்த்துள்ளன. தமிழ் ஹைக்கூ கவியுலகம் கொண்டாடும் கவிஞர்களில் தம்பி சுபி முருகனும் ஒருவராக இணைந்திருப்பதில் பேரானந்தம் அடைக்கின்றேன்.
-கவிஞர் மு.முருகேஷ்
சுபி.முருகன் பரவலாக எல்லா இலக்கிய இதழ்களிலும் எழுதி வருபவர்... பன்முகச் சிந்தையாளர்... தினமணி நாளிதழிலும் கலாரசிகன் அவர்களால் பாராட்டுப் பெற்றவர்.இவரின் ஹைக்கூக்கள் சில திசை திருப்பி சிந்திக்க வைக்கின்றன. ஹைக்கூ பற்றிய பரவலான சிந்தனையும், தளத்தில் தர்க்கங்களும், விவாதங்களுமாய் எது ஹைக்கூ என கேள்விக்குறி எழுகிற காலகட்டத்தில் சுபி.முருகன் துணிச்சலுடன் தொகுப்பை முன்வைத் திருப்பது ஒரு வரவேற்புக்குரியது.
-காவனூர் ந.சீனிவாசன்
Be the first to rate this book.