இயல்பிலேயே ஒரு வகையான பின்-நவீனத்துவ மனம் பொற்கலையுடையது. கெட்டித்தட்டிப்போன அனைத்து விதமான அதிகாரங்களுக்கும் எதிரானவை இவரது கவிதைகள், குடும்பம். கல்வி, மதம், சாதி என்று அதிகாரம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவற்றை உடைப்பதிலும், கட்டவிழ்ப்பதிலும் தீவிரமாக இயங்குபவையாகப் பொற்கலையின் கவிதைகளை மதிப்பிடலாம்.
பல்கலைக்கழகம், இலக்கிய விருதுகள், பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், பாராளுமன்றங்கள், சட்ட மன்றங்கள் அனைத்தையும் அனைவரையும் தன் வார்த்தைகளால் தீக்கிரையாக்கியுள்ளார் பொற்கலை. வாழ்வின் யதார்த்தங்களோடு அவரால் உடன்பாடு செய்துகொள்ள முடியவில்லை. உடைந்துபோகும் விழுமியங்கள் அவருக்குள் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன.
படைப்புத் தளத்தில் புதுமைப்பித்தனின் எள்ளலும், உணர்வுத் தளத்தில் பாரதியின் அறச்சீற்றமும், அதிகாரத்திற்கு எதிரான அரசியலில் பெரியாரின் இயல்பும் ஒருங்கே அமையப் பெற்றவையாகப் பொற்கலையின் கவிதைகளைப் பார்க்கிறேன். அதீதமான பாராட்டுரையாக இதனைக் கருதினால், பொற்கலையின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்.
-பேரா. பா. இரவிக்குமார்
Be the first to rate this book.