வரலாறுகளை மறைப்பதும் வரலாறுகளை மாற்றுவதும் தொடர்கதை தான் உலகம் முழுவதும். இருந்தும் ஏதேனும் காரணத்தால் அதை வெளிக்கொண்டு வரவேண்டும் அல்லவா. அதுபோன்ற ஒரு வரலாற்றுச் சம்பவத்தை உண்மையுடன் சற்று புனைவான கதாபாத்திரங்களுடன் சேர்த்து தெளிவாக கொடுத்திருக்கிறது இந்த நாவல்.
நாவலின் ஆரம்பத்தில் இருந்து புதுப்புது கதாபாத்திரங்களில் அறிமுகம், வெவ்வேறு இடங்கள் என பல பாதைகளில் பயணித்து இறுதியில் புரட்சியுடன் முடிகிறது. சின்ன காளை, வேலன், ஜான் கே என சில குறுகிய கதாபாத்திரம் மூலமாக நாவல் முழுவதும் விரிகிறது.நாவலின் நாயகனாக சின்ன காளை இருந்தாலும் நாவல் முழுவதும் தன் வசமே வைத்துக் கொள்கிறார் பெரிய காளை. இரவில் பண்ணையர்களுடன் கூடும் கூட்டம் முடிந்தது நடந்து செல்லும் போது பெரிய காளை கூறுவது.
இங்க எல்லாருமே பேச வந்திருக்காங்க. அவங்கவங்க சொல்ல நினைக்கிறதப் பேச வந்திருக்காங்க. நல்லா யோசிச்சுப் பாரு இங்க எல்லாருமே பேசி இருப்பாங்க. எந்த முடிவும் எடுத்திருக்கமாட்டாங்க. ஏன்னா இது கேட்கிற கூட்டம் இல்லை பேசுற கூட்டம்.
இதுபோன்று வார்த்தைகளிலே கதாபாத்திரம் முழுவதுமாக வெளிவந்து விடுகிறது. ஆங்கிலேயர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் ஒரு சில ஆங்கிலேயர்கள் அந்த அதிகாரத்தை விடக்கூடாது அதற்கேற்ப மக்களை நம் வசம் வைத்து சிறந்த நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கு ஜான் கே கதாபாத்திரமே சாட்சியாக இருக்கிறது.இருளிக்கூத்து, சமண சமயம், காஞ்சி மடம்,ஆங்கிலேயர்கள் ஆட்சி போன்ற வடிவங்களில் தான் பேச வேண்டிய கருத்தையும் அரசியலையும் மிக மிகக் கச்சிதமாக பேச இருக்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.