சிறப்புக் கவனத்திற்குரிய சிறுவனான கிறிஸ்டோஃபர்தான் இந்நாவலின் நாயக நாவலை எழுதுவதும் நகர்த்திச் செல்வதும் அவளே சிறிஸ்டோஃபர் நம்மிடம் எவ்விதச் சலுகையையும் எதிர்நோக்குவதில்லை; மாறாக தன் வாழ்வை, தன் நகர்வை தர்க்கத்தின் வழியே இட்டுச் செல்கிறான். தர்க்கத்திற்கு வெளியேயுள்ள எதையும் இந்நாவல் (க்றிஸ்டோஃபர்) கண்டுகொள்வதில்லை; மாறாக அவற்றைக் கடுமையாக விமர்சிக்கிறது. கோட்பாட்டிற்கும், தத்துவத்திற்கும் தர்க்கம் ஓர் அடிப்படைக் காரணி என்னும்போது நாவல் கூடுதல் சிறப்படைகிறது. இதைச் சிறார் நாவலாகக் குறுக்காமல் ஒரு பரந்துபட்ட நாவலாக நம் முன் கொணர்ந்தளித்துள்ளார் மார்க் ஹெடன் (Mark Haddan). மேலும் சிறுவனின் தனிச்சிறப்பான சரகச் பயணம், நவீன மனத்தின் அகச்சிக்கல்கள் மற்றும் அதன் உறவுச் சிதைவுகள் ஆகியவற்றையும் இந்நாவல் பேசுகிறது. ஓர் இடத்தில் அல்லது காலத்தில் நிகழும் பல்வேறு விடயங்களின் சாத்தியங்கள் முடிவற்றவை என்னும்போது இந்நாவல் அந்நீட்சியைப் பின்தொடர்கிறது. இந்நாவலின் சிறப்பும் அதுவே. இப்பொருளமைதியை விழுப்பத்துடன் மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீதர் ரங்கராஜுக்கு வாழ்த்துகள்.
-பயணி
Be the first to rate this book.