ஏ! தமிழ் மெருமக்களே! எனக்குத் தண்டனை இடுங்கள்! ஆரியரை நம்பாதீர்கள்! உங்கள் அறிவை, உங்கள் ஆண்மையை ஆரியரின் சூழ்ச்சியில் எள்ளத்தனையும் ஈடுபடுத்தாதீர்கள்! ஆரியர்களை அகற்றுங்கள். தமிழர் நாட்டைத் தமிழர் நாடாக்குங்கள் உங்கள் சக்கரவர்த்தி உங்களுக்காக மாண்டார். ஆரியர் அக்ரமத்திலிருந்து உங்களை மீட்கவே மாண்டார். அவர் மாண்டதற்கு ஆரியர் சொல்லும் வேதம், மந்திரம், கடவுள், அவதாரம் காரணமே அல்ல. இவையனைத்தும் அயோக்கியர்களின் பொய்யுரைகள். அந்தோ வீரத் தமிழன் மாண்டதற்குக் காரணத்தை அவன் சரித்திரத்தை உண்மையாக எழுதவும் கவிஞர்கள் அஞ்சுவாரோ? இன்று வீரத்தால் உகுத்த சக்ரவர்த்தியின் ரத்ததின் ஒவ்வொரு துளியும் இன்றைக்கில்லாவிடினும் ஒரு காலத்தில் வீரத் தமிழரை, சுயமரியாதையுடைய தமிழரை உண்டாக்கும் என்ற நிச்சயத்தோடு, இதோ நான் விடை பெற்றுக்கொள்கிறேன்! பிற்காலத் தமிழர்களிடம் இந் நாட்டை ஒப்படைத்து நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.