வழமையாக பிறர் பார்க்கிற, உணர்கிற, வரையறுக்கப்பட்ட வழிகளில் இருந்து தம்மை விடுவிக்கின்றன தபசி கவிதைகள்.
சொல்லப்படாத கதையை உங்களுக்குள் சுமப்பதை விட பெரிய வேதனை எதுவும் இல்லை!' என்பார் மாயா ஏஞ்சலோ. ஆகவே, தன் தினசரிகளின் கதையை கவிதையில் இறக்கி வைத்துவிடுகிறார் தபசி, அவரது வெற்றி அதை பொது அனுபவமாக மாற்றுவதில் இருக்கிறது. மிகப் புழக்கமான சொற்கள். யதார்த்தமான காட்சிகள். குறுக்கே ஒரு திரை தொங்கும். அதை சடாரென்று விலக்கிக் காட்டுவார்.
அனுபவம் தபசியை, இன்னும் எளிமைப் படுத்தியிருப்பதை, இன்னும் ஆழப்படுத்தியிருப்பதை இரண்டு சிக்ஸர்களின் கதை வெளிப்படுத்துகிறது.
-கரிகாலன்
Be the first to rate this book.