நாம் இந்த உலகில் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எடுத்துச் செல்லப் போவதில்லை. எடுத்துப் போகவும் முடியாது. இடையில் நாம் ஈட்டிய அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கவும் முடியாது. எனவே நம்மிடம் இருப்பதைப் பிறருக்கு வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அவர்கள் அடையும் மகிழ்ச்சியில்தான் நம் மகிழ்ச்சியும் அடங்கி உள்ளது. மகிழ்ச்சி பெறுவதில் இல்லை, கொடுப்பதில்தான் உள்ளது என்பதை அப்போது உணர்வோம். இத்தனை காலம் அதனைச் செய்யாதிருந்துவிட்டோம் என்று கவலைப்படுவோம்.
கஞ்சத்தனத்தைக் கசக்கி எறியுங்கள், தாராளத் தன்மையைத் தனதாக்கிக் கொள்ளுங்கள்.வறுமையைக் கொண்டு பயமுறுத்தும் ஷைத்தானை ஓடஓட விரட்டுங்கள். செல்வத்தை மேலும் வளரச் செய்யும் தான தர்மங்களை ஓடி ஓடிச் செய்யுங்கள்.ஊரான் பிள்ளைகளுக்கு வாரி வழங்கினால் நம் பிள்ளைகளை இறைவன் ஊட்டி வளர்ப்பான் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.வாரி வழங்கினால் இம்மையிலும் வெற்றி! மறுமையிலும் வெற்றி.
Be the first to rate this book.