சமூக அக்கறையும் தீவிரமான அரசியல் பார்வையும் கொண்ட நவீன மகளிர் உலகின் குரல் தீபலட்சுமியுடையது. பரிவும் தாய்மையும் வாஞ்சையும் தோயும் வரிகளே மறுகணம் மூர்க்கமாய் முழங்கவும் செய்கின்றன என்பதே இந்நூலின் சிறப்பு. வாசிப்பவரை நெருடச்செய்யாமல் அதே சமயம் தன் தரப்பின் தரவுகளைத்தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கிறார் தீபலட்சுமி. இது இந்த புதிய தலைமுறைப் பெண்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் குரல்.
இருபதாண்டுகளாக ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், சாதி ஒழிப்பு குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். 'இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை' 'குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்' நூல்களின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஜெயகாந்தனின் 11 சிறுகதைகள் மற்றும் கீதா இளங்கோவனின் 'துப்பட்டா போடுங்க தோழி' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
'ஹெர் ஸ்டோரிஸ்' வலைத்தளத்தில் 'ஆண்கள் நலம்' எனும் தலைப்பில் இவர் எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.