ஈழம் விடுதலைக்காக இன்னமும் களமாடுகிற தேசம். அங்கே துப்பாக்கியின்றி. இரத்தமின்றி ஒரு போர் நீள்கிறது. ஈழத் தமிழரின் வாழ்வே போராட்டமாகிவிட்ட நிலையில், போருக்குப் பிந்தைய காலத்திலும் சிங்களப் பேரினவாத அடக்குமுறையினாலும் ஈழ மக்களின் உணர்வு வெளிப்பாடுகளாலும் இன்னமும் அங்கே இரண்டு தேசங்கள்தான் உள்ளன என்பதை இந்நூலில் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் தீபச்செல்வன்.
கவிதைகள் மற்றும் நாவல்களின் வாயிலாக உலகத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட எழுத்துப் போராளியான தீபச்செல்வன் அடக்குமுறைகளின் மத்தியில் வாழ்ந்தபடி துணிந்தெழுதியது இந்நூல்.
Be the first to rate this book.