இக்குறுநூலில் இடம்பெற்றுள்ள ஏழு உரையாடல்களிலும் இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பே மையக் கருத்தாக இழையோடுகிறது. வாசகர்களைப் பல்வேறு தளங்களுக்கு இட்டுச்செல்லும் தன்மை கொண்டதாக இந்த வளர்ச்சியால் நன்மை யாருக்கு? நூலின் பேசுபொருள் அமைந்துள்ளது.
இந்த உரையாடலை நிகழ்த்திய கவிஞர் ஆசையின் கூர்மையான கேள்விகளும், முன்னத்தி ஏர் சு. தியடோர் பாஸ்கரன், சூழலியல் செயல்பாட்டாளர் ஆஷிஷ் கோத்தாரி, பறவையியலாளர் ஜெகநாதன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் கல்யாண் வர்மா, செந்தில்குமரன், நெல் ஜெயராமன், யானை ஆய்வாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டவர்களின் காத்திரமான உரையாடலும் இக்குறுநூலை முதன்மையாக்குகின்றன.
அந்த வகையில், ஆளுமைகளை நேர்கண்ட கவிஞர் ஆசையும், உரையாடலை நிகழ்த்திய ஆளுமைகளும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த வளர்ச்சியால் நன்மை யாருக்கு?' என்பதை நூல் வாசிப்பின்போது வாசகர்கள் உணர்வார்கள்.
- ஏ.சண்முகானந்தம்
Be the first to rate this book.