அடிமைச் சிறையைக் கொடுக்காமல் இருக்கும் வரைக்குமே கூடு சுகமானது. எப்போது அங்கே அடிமைத்தனமும் ஆதிக்கமும் ஒருவருக்கொருவர் பிணைப்பின் பெயரால் பிணையும் ஆகிறதோ. அங்கே கூடு விலகல் நேரிடுகிறது. ஏதோவொரு கலைக்கப்படுதல். ஏதோவொரு வெளியேறலுடன் வாழ்க்கை கூடு தேடலுடன் அல்லது கூடு வெளியேறுதலுடன் அமைந்துபோவதையே ‘இந்தப் பறவைக்குக் கூடு இல்லை’ தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
கூடு இல்லாதவர்களுக்கு அது ஒரு தேடல். கூடு இருப்பவர்களுக்குகோ பலவேளைகளில் வெளியேறலுக்கான அவஸ்தை. எங்கே எனக்குரிய கூடு? பறத்தலிலா? அடைபடுதலிலா? எங்கே போனால் என்ன? அன்பெனும் கூடு மட்டும்தானே தேடலாக இருக்கிறது? தொடரட்டும் தேடலும் வெளியேறலும்.
– மலர்வதி
Be the first to rate this book.