இண்டர்ஸ்டெல்லர் - Interstellar (திரைக்கதை - ஸ்டோரிபோர்ட்)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

இண்டர்ஸ்டெல்லர் - Interstellar (திரைக்கதை - ஸ்டோரிபோர்ட்)

570 ₹600 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Author: கிறிஸ்டோபர் நோலன், ஜோனதன் நோலன்
Translator: தீஷா
Publisher: பேசாமொழி பதிப்பகம்
Out of Stock
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2025

Description

அறிவியல் புனைகதை', எனும் திரைப்பட வகைமையில், இன்றளவும் உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுவருகிற 'இண்டர்ஸ்டெல்லர்' திரைப்படத்தின் முழு திரைக்கதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டோரிபோர்ட்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. நேரம், ஈர்ப்பு விசை, காதல் போன்ற ஆழமான, கருப்பொருள்களை நுணுக்கமாகக் கையாண்டுள்ள இதன் திரைக்கதை, மனித இனத்தின் மீட்பு பற்றிய ஒரு அத்தியாவசிய தேடல் பயணத்தையும் கொண்டிருக்கிறது. ப்ளாக்ஹோல், வார்ம்ஹோல், நேர விரிவாக்கம் (Time Dilation) போன்ற அறிவியலின் நுல்லியத்தன்மையையும், தந்தைக்கும் மகளுக்குமிடையே நிலவுகிற 'அன்பு" எனும் மனித உணர்வையும், ஒருங்கிணைத்துத் திரைக்கதையாக்கியிருக்கிற நுட்பங்கள் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுகின்றன.

திரைப்படத்தில் இடம்பெறாத சில காட்சிகள், உரையாடல்கள் இத்திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது, இயக்குநர் எதற்காக அக்காட்சியைத் திரைப்படத்திலிருந்து நீக்கியிருக்கிறார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற திரைக்கதையையும், திரைப்படத்தையும் பலமுறை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, அதற்கான பதிலை நாமே கண்டறிய முடியும். அந்த வகையில், சினிமா உருவாக்கத்தையும், திரைக்கதை எழுதும் கலையையும் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம். பின்பு எதற்காக, அதன் திரைக்கதையைப் படிக்கவேண்டும் போன்ற கேள்விகள் வழக்கமாகக் கேட்கப்படுவதுண்டு. கிறிஸ்டோஃபர் நோலன் போன்ற ஒரு தேர்ந்த இயக்குநராக இருப்பினும், அவர் தனது பட உருவாக்கத்திற்காக எவ்வளவு மெனக்கெடுகிறார். ஸ்டோரிபோர்டுகளின் வாயிலாக எப்படித் தன் திரைக்கதையை முன்கூட்டியே காட்சிப்படுத்திப் (Previsualize) பார்க்கிறார். சிப் த்ரோன் (kip thorne) போன்ற விஞ்ஞானிகளுடன் இணைந்து எப்படி ஒரு காட்சியை உயிரோட்டமாக வடிவமைக்கிறார் போன்ற நுட்பமான விஷயங்களை நாம் புரிந்துகொள்ள, அவர் உருவாக்குகிற திரைப்படங்களையும், திரைக்கதைகளையும் பலமுறை பார்க்கவும் படிக்கவும் வேண்டியிருக்கிறது. இது, நாம் உருவாக்க நினைக்கிற ஒரு திரைக்கதையில் எவ்வளவு நேர்மையாகச் செயலாற்றவேண்டும் என்ற புரிதலை வழங்குகிறது. எனவே. ஒரு வழக்கமான பார்வையாளர்கள் போல ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுடன் கடந்துவிடாமல், அதன் திரைக்கதையையும், அது காட்சியாக மாற்றப்பட்டிருக்கிற விதத்தையும் கவனித்துக் குறிப்புகள் எடுப்பது. திரைப்பட உருவாக்கத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கியமான பயிற்சியாகும்.

திரைக்கதை எழுத்தாளர்களாக, கோனதான் நோலன் மற்றும் க்றிஸ்டோஃபர் நோலன் ஆகியோரை ஜோர்டன் கோல்ட்பெர்க் எடுத்த பேட்டியும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. 'இண்டர்ஸ்டெல்லர்'. திரைப்படத்தை. சிறிஸ்டோஃபர் நோலன் அணுகியிருக்கிற தன்மையை, அப்பேட்டியின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அறிவியலும் கற்பளையும் இணையும் மிகப் பிரமாண்டமான கதையின் பின்னணி உருவாக்கத்தை ஆராய விரும்பும் சினிமா ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு. இது ஒரு தவறவிடக்கூடாத புத்தகம்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp