நரைத்தத் தலையோடு கையில் தடியோடு முருகனைப் பாடிய விநாயகர் மற்றும் ஞானக்கோவை பாடிய ஔவையின் முதுகை நிமிர்த்தி பாட்டும் கூத்துமாய் வந்த பாடினியாக ஒளவையை இன்குலாப் அறிமுகம் செய்வதை நுட்பமாக ஆய்ந்து காட்டியுள்ளார் சுந்தரமூர்த்தி. ஒளவை, பாரி மகளிர். பெருங்கோப்பெண்டு, இன்குலாபின் குரலை ஒலிக்கும் புனைவுப் பாத்திரமான காமக்கிழத்தி, காப்பியக் காரிகையான மணிமேகலை ஆகியோர்வழி சமூகத்தில் பெண்களுக்கான இடத்தை, இருப்பை இன்குலாப் தன் மொழியில் ஓங்கி முன்வைப்பதை. அவரின் மற்றமையின் பார்வையை. அழகியலை. உளவியலைச் சிறப்பாய் தன் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அலைகடலிடமிருந்தா. கரையிடமிருந்த... என்பது போன்ற நுண் உணர்வுச் சித்திரங்களைப் பிற்காலத்தில் பேசிய இன்குலாபின் கவித்துவமான நாடகத்தடங்களை, மொழி ஆளுமையை ஒன்றாகப் பிடித்துக் காட்டியுள்ளார். சுந்தரமூர்த்தி.
-முனைவர் மு. அப்துல் ரசாக்
வரலாற்றின் ஊடாகத் நாடகப் படைப்பில் பெண்களுக்கு எதிரானவைகளை மட்டுமன்றி ஒடுக்குமுறைக்கு எதிரானவற்றையெல்லாம் தன் எதிர்ப்புக் குரல்வழி வினையாற்ற முயலும் இன்குலாப் தன் எழுத்தின் வழிப் பனுவலில் இரண்டு கருத்துகளை மையப்படுத்துகிறார். ஒன்று போராடுவது, மற்றொன்று வாழமுயல்வது. இன்குலாபின் நாடக ஆளுமையைப் பல கோணங்களில் ஆய்வு செய்து, நாடகங்களின் பாத்திரங்களும், காட்சிகளும் சமூக ஓட்டத்தில் ஏற்படுத்தும் உந்துதலை இந்த நூல் ஆசிரியர் கு.சுந்தரமூர்த்தி மிகவும் உண்மையாக பதிவு செய்திருக்கிறார். நாடக ஆர்வலர்களுக்கும் கலை தேடல் உள்ளவர்களுக்கும் இந்த நூல் மிகவும் முக்கியமான நூலாக அமைகிறது.
-நிஜந்தன்
Be the first to rate this book.