அம்மாவின் கவிதைகள்
புத்தகம் கேட்க வந்த பக்கத்து
வீட்டுக்காரரிடம் அம்மா நல்ல
சில புத்தகங்கள் இப்போதெல்லாம்
கிடைப்பதில்லை என்று அலுத்துக்கொண்டாள்
இந்த மாதிரி கவிதைகளெல்லாம் பாமர ஜனங்களுக்குப்
புரியாதென்றும் சொல்லிவைத்தாள் படங்கள் கூட
நேற்றை மாதிரி அழகாய் இல்லையென்றாள் மூலையில்
விலகி நான் படித்துக்கொண்டிருக்கும் கவிதையைக்
காட்டிலும் அம்மாவின் பொய்களும் பாவனையும்
அழகாய் இருக்கின்றனதான் அவற்றுக்குக் கவிதைகளாக
வேண்டிய கவலையேதும் இல்லாதிருந்த காரணத்தால்.
01.09.88
Be the first to rate this book.