பேராசிரியர் முனைவர் வ. செயதேவன் இருமொழி வல்லுநர். அகராதிக் கலையில் தமக்கெனத் தனி அடையாளத்தைக் கொண்டிருப்பவர். அவரது இந்த நூல், இலகுவாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எளிமையாகவும், மூலத்தை நுணித்தறிந்து போற்றும்படியாகவும் அமைத்திருப்பது சிறப்பு. இந்நூல் பல்வேறுபட்ட பாடுபொருளைக் கொண்டுள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட கவிஞர்களின் சிந்தனைகளையும், அவர்கள் பாடியுள்ள முறைகளையும் அறிந்து மகிழ்கிறோம். மொழிபெயர்ப்பு எனத் தெரியாமல் மூலத்தின் சுவை குன்றாமல் இந்நூலைப் பெயர்த்திருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும். மூலமொழியின் நுனியளவும் மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திப் பேரா. செயதேவன் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு மிகவும் ரசனைக்குரியதாக உள்ளது. பெயர்ப்பினை மூலத்திலிருந்து பெரும்பாலும் விடுபாடில்vலாமல் அமைத்துக்கொண்டுள்ளார். படிப்பதற்கு மொழிபெயர்ப்பு என்று தெரியாமலேயே கவிதையை நகர்த்தியிருப்பது போற்றுதற்குரியது. - இராம. குருநாதன்
Be the first to rate this book.