கவிஞர் சுகதேல் தனது முதல் கவிதைத் தொகுதியின் (ஒவ்வொரு கணமும் 2018) முன்னுரையில் குறிப்பிட்டது போல, கட்டுரையாளாலும் கவிதையானாலும் எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை வாசிப்பவர்களுக்கு கடத்த முடியும் என்று நம்புகிறார். இன்னொரு திணை மயக்கம் இந்த இரண்டாவது கவிதைத் தொகுப்பும் அவ்வாறே வெளிப்பட்டிருக்கிறது.
படைப்பாளுமைகளால் கடைப்பிடிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட கவிதை வடிவங்கள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. பாப்லோ நெருடா, மாயா ஏஞ்சலோ முதல் சமகாலக் குரல்களான மார்கரெட் அட்வுட் மற்றும் 2024-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென் கொரிய கவிஞர் ஹான் காங் வரை தங்களுக்கு உகந்த வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறார்கள், படைப்புலகில் அப்படியான முயற்சிகள் தொடர்ந்து நடக்கும்.
வெறும் சொற்கட்டுமானங்களின் நோக்கில் கவிதைகளை எடை போடும் நாள்பட்ட பழக்கம் தமிழில் இருக்கிறது. அது கடந்து தேடுபவர்களுக்கு இந்த தொகுப்பு வாசிப்புக்குரியதாக இருக்கும்.
Be the first to rate this book.