அறிவொளிக்குப் பிறகு அடுத்த பணி காத்திருக்கிறது. அது வாசிப்புப் பணி. தட்டுத் தடுமாறி வாசிக்கும் ஏழை வீட்டுப் பிள்ளைகள் தயக்கமும் தடுமாற்றமும் இல்லாமல் வாசிக்க வேண்டும். மிக முக்கியமாக, அரைகுறைப் படிப்பாளிகளான பெண்கள் வாசிக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் 'பெண் கல்வி வாசிப்பு மையம்' உருவாக வேண்டும்.பாரதி புத்தகாலயமும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து சின்னஞ் சிறிய புத்தகங்களைப் படங்களுடன் வெளியிட்டு வருவது ஏழை எளியோர் வாசிக்கத்தான்! சிறு புத்தகங்கள் நூற்றுக் கணக்கில் வேண்டும்.
வாசிப்போரைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும். இடதுசாரிகளால் மட்டும் இப் பணியைச் செய்யமுடியும்.இங்கிவனை யான் பெறவே இதைத் தூண்ட முடியும்.ஓர் இயக்கத்துக்கான உள்ளடக்கம் நூலுக்குள் கிடப்பது உண்மை...
-ச.மாடசாமி
Be the first to rate this book.