இன்று நாம் அனைவரும் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சுதந்திர மாளிகையின் அடிப்படை அஸ்தி வாரத்தை அமைப்பதில் தமிழ்நாட்டில் தோன்றிய குறுநில மன்னர்களும், பொதுநலன் கருதிய தொண்டர்களும், தியாகத்தின் திருவுருவமாய் வாழ்ந்த தலைவர்களும், செங்குருதியைச் தங்களின் சிந்தியிருக்கின்றார்கள். அவர்களின் வீர வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக, நெறிப்படுத்தும் ஒரு வழிகாட்டியாக இருந்து, அவர்கள் நம் நாட்டினைத் தலைமையேற்று வழி நடத்திடப் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் அடிமைத் தளையை அறுத்தெறிய சுதந்திரப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தியாக மறவர்களின் புரட்சிகரமான வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து முனைவர் நா. ஞானசேகரன் அவர்கள் 'இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள் என்ற தலைப்பில் இச்சிறு நூலினைப் படைத்துள்ளார்.சுதந்திர இந்தியாவில் வாழ்கின்ற நாம் அறவழியில் வாழ முற்பட்டால் ஆயிரமாயிரம் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்ற மேலான உணர்வைத் தூண்டுகின்ற இந்நூலை அனைவரும் படித்து தன்மான உணர்வோடும், தன்னிகரில்லா வீரத்தோடும் என்றென்றும் விளங்கிட வேண்டுகின்றேன்.
-S.ராஜகுமார்
Be the first to rate this book.