இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்.
* சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
* ஹர்ஷத் மேத்தா
* நிரவ்மோடி
* டி.ஹெச்.எஃப்.எல் (DHFL)
* சாரதா சிட்ஃபண்ட்ஸ்
* சந்தா கோச்சார்
* கார்வி
* கேதன் பரேக்
* எ.பி.ஜி ஷிப்யார்ட்
* கிங் பிஷர் நிதி மோசடி
மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.
நா.கோபாலகிருஷ்ணன்
சொந்த ஊர் திண்டுக்கல், படித்தது இளங்கலை பொறியியல் (CIVIL ENGINEERING). வங்கி மற்றும் நிதித்துறையில் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். முன்னணி வீட்டுக்கடன் நிறுவனம் ஒன்றின் தமிழ்நாடு தலைமைப்பொறுப்பில் இருந்தவர். கடந்த ஒன்பது வருடங்களாக, வங்கிகளுக்கான கட்டட மதிப்பீடு மற்றும் கட்டடம் கட்டும் நிறுவனத்தினை திண்டுக்கல்லில் நடத்தி வருகிறார். கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போட்டித்தேர்வுகள் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஒரு சிறிய நிறுவனத்தின் உரிமையாளர்.
Be the first to rate this book.