இவர் 1958ஆம் ஆண்டு, அதாவது தமது பதினான்காம் வயதில் எழுத்துத் துறையில் காலடி பதித்தவர். எண்ணற்ற படைப்பிலக்கியங்களுக்குச் சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தின் பல்கலைச் செல்வர்' பட்டம், புதுவை அரசின் 'பாரதிப் பட்டயம்', தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் ஆகியவை இவரது எழுத்து வன்மைக்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
அந்த வகையில் 'இல்லற வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் மன இயல்புகளையும், உடற்கூறு தன்மைகளையும் புரிந்து கொண்டு செயல்படாமையே' என்கின்ற ஸிக்மென் ஃபிராய்டு என்னும் உளவியல் தத்துவ மேதையின் கருத்தினை உள்வாங்கி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இவரது 'நாதமடி நீ எனக்கு' என்னும் இந்நூல். இதிலுள்ள கதைகளை வாசகர்கள் ரசித்துப் படித்து மகிழ்வார்கள் என்பது உறுதி.
Be the first to rate this book.