இந்து மதத்தை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்களே, இந்தச் செய்தி சிலருக்கு வியப்பைத் தரலாம். பலருக்கு வெறுப்பைத் தரலாம். ஆனாலும் இந்த உண்மையைக் காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்து என்ற சொல்லின் தோற்றம் தொடங்கி இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பான்மையினரான மதமற்ற மக்கள் இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டது வரையிலான வரலாறு குறித்து 'தி கேரவன்' ஆங்கில இதழில் திவ்யா திரிவேதி, ஷாஜ் மோகன், ஜெ. ரகு ஆகியோர் எழுதிய சுட்டுரைகளை சுஜா ராஜேஷ் தமிழாக்கம் செய்துள்ளார்.
எவ்விதமான சார்பு நிலையிலும் நின்று நோக்காமல் மதம் எனும் எல்லைக் கோட்டுக்கு அப்பால் நின்று வாசிப்பவர்களுக்கு இந்து எனும் சொல் மற்றும் இந்து மதம் குறித்தான பல்வேறு தகவல்களையும் புரிதல்களையும் இந்த நூல் வழங்கும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.