இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் அறிவு ஆற்றலுக்கும் மிக முக்கியமான முட்டுக்கட்டையாகஇருக்கும் இந்தியச் சாதிகளுக்கு அஸ்திவாரமாக விளங்கும் பரம்பரைக்குலத்தொழில் பிரிவினைகளை இருப்புப்பாதைகளை அமைப்பதிலிருந்து உருவாக்கப்படும் நவீன இயந்திரத் தொழில்கள்கலைத்துவிடும். இந்த உலகத்திலேயே சுவர்க்கத்தைஉண்டாக்குவதற்கு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை உண்மையான புரட்சிப் போராட்டத்தில் ஒன்றுபடுத்துவது, மேல் உலகத்தில் உள்ளசுவர்க்கத்தைப் பற்றி பட்டாளி வர்க்கத்தின் கருத்தொற்றுமையை உருவாக்குவதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானதாகும். அதனால்தான் நாத்திகத்தை நமது வேலைத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதும்இல்லை. அதனா ல் தான்நமது கட்சியுடன் உள்ள தொடர்பில் தொடர்புகொள்வதில் இன்னும் பழைய தவறான எண்ணங்களில்மிச்சம் வைத்திருப்பதை கொண்டிருக்கும் பாட்டாளிகளை நாம் தடை செய்யவில்லை. தடை செய்யவும் கூடாது. நாம் எப்போதும் விஞ்ஞானப்பூர்வமானஉலகக் கண்ணோட்டத்ததைப் பற்றி போதனை செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.
Be the first to rate this book.