நம்மீது திணிக்கப்பட்ட வரலாற்றைப் படித்து, தவறான கண்ணோட்டங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் கடந்த சில தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
• முகலாய மன்னர்கள் அனைவரும் மாபெரும் நாயகர்களாகவும் புனிதர்களாகவும் சித்திரிக்கப்படும்போது, பாரத நாட்டுத் தத்துவங்களும் விழுமியங்களும், குறிப்பாக, சனாதன தர்மத்தின் மேன்மைகள் திரிக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்படுவது ஏன்?
• உண்மைகளை மூடி மறைத்து, கோவில்களைத் தகர்த்தெறிந்த அந்நிய நாட்டுக்காரர்களை மதநல்லிணக்கத்தின் தூதுவர்களாகப் போற்றுவது எதன் அடிப்படையில்?
• பாரத இந்து மன்னர்களின் அறச் செயல்பாடுகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?
இந்தப் புத்தகம் உங்களுடன் நேர்மையாக வரலாற்று ஆதாரங்களுடன் பேசுகிறது. காலங்காலமாகப் புகட்டப்பட்ட தவறான மொழிபெயர்ப்புகள், மிகைப்படுத்தப்பட்ட புகழுரைகள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளைத் துணிச்சலுடன் உடைத்தெறிகிறது.
பாரதக் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் சித்தாந்தச் சதி வலைகளை வெளிக்கொண்டு வந்து, நிஜமான இந்திய வரலாற்றை அதன் முழு ஒளியில் காணத் தூண்டும் ஒரு முயற்சியே இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.