வழக்குரைஞர் ஆ. வெங்கடேஷ் ஆதி அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்து வழங்கி உள்ள இந்த நூல் தமிழுக்கும் சமூகவியலுக்கும் குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டவியல் வரலாற்றுக்கும் (History of Indian Constitutional law) ஒரு புது வரவாகும். தந்தை வி.ஐ.முனுசாமி பிள்ளை அவர்களும் மாவீரர் எஸ். நாகப்பா அவர்களும் ஆற்றிய உரைகளை மிக எளிமையாகவும் அதே நேரம் தெளிவாகவும் தந்திருக்கிறார்.
-முனைவர் க. ஜெயபாலன்
வெங்கடேஷ் ஆதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவருடைய இந்நூலில் தந்தை முனுசாமிப்பிள்ளை மாவீரர் எஸ்.நாகப்பாவின் முக்கிய உரைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாபாசாகேப் அம்பேத்கர் தவிர, எத்தனை தலைவர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டது. முனுசாமி பிள்ளைக்கும் அண்ணல் அம்பேத்கர் இடையே ஏற்பட்ட அரசியல் முரண். பட்டியல் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு ஆகியவற்றில் முனுசாமிப் பிள்ளையின் உறுதியான பங்களிப்பு,இந்து திருமண சட்டத்தில் முனுசாமிப் பிள்ளை அவர்களது ஆக சிறந்த உரைகளும். எஸ். நாகப்பா அவர்கள் ஜமின் நில ஒழிப்பில் ஆற்றிய புரட்சிகரமான உரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது
Be the first to rate this book.