பணப்பெட்டியிலே, மத்திய சர்க்காருக்கு இவ்வளவு அதிகமான அதிகாரத்தைக் கொடுத்துவிட்டால் மாகாண சுயாட்சியே, ஒரு கேலிக்கூத்தாகத்தானே போகும். பணம் பலம் இரண்டும் மத்திய சர்க்காருக்கு; மிச்சம் என்ன இருக்கும் மாகாணத்துக்கு? வியாபாரமோ, வடநாட்டாரின் 'அலாவுதீன் தீபம்.' பின்னர் எதைக்கொண்டு, தமிழ் மாகாணம் பெருமை கொள்ள முடியும், வளர முடியும், வாழமுடியும்? சொந்த சொத்தை நிர்வகிக்க முடியாத அபலை தனவானிடம் அதைக் கொடுத்துவிட்டு, மாதம் தோறும் சீமான் வீடு சென்று, செலவுக்குப் பணம்பெறும் பரிதாபநிலைதான் மாகாணத்துக்கு. 'இதற்கா மார்தட்டி, தோள் தட்டி, மொழிவழி மாகாணம் அமைத்தோம்' என்று கேட்கும் தமிழர் எங்கே?
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.