இணை, நான்கு தலைமுறை பெண்களின் அக உலகைத் திறந்துகாட்டுகிற நாவல், வேதவல்லி, திலகவதி. கல்யாணி, சாரதா, சுசீத்ரா, பீனு என பெண் பாத்திரங்களால் நிரம்பி வழிகிற கதை. ஆண் பாத்திரங்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்கள் பொழியும் ஒளியில், இவர்களுடைய சித்திரங்கள் மங்கிக் காட்சியளிக்கின்றன. வேதவல்லி ஒரு தேவதாசி. சிறுவயதில் அம்மாவின் நிர்பந்தத்தால் ஒரு கிழவனுக்கு முந்தி விரிக்கிறாள். வயதான ஜமீன்தாரருக்கு வாக்கப்படுகிறாள். கடனே என்று ஆண்களிடம் படுத்துக்கிடக்கிறாள். காமம் எத்தனை அழகானது. அவளுடைய சந்தனவாச உடம்பை, திமிரி எழும் முலைகளை, ஆலிலைபோல இறங்கும் அல்குல்லை. செவ்வரி தொடைகளை, ஏதோ மாடு மேய்வதற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிற நிலம்போல. படுக்கையில் ஒப்புக்கொடுத்தவள் அவளது காமம், அவளை மதித்த, புரிந்துகொண்ட, ஒரு வெள்ளைக்கார துரையிடம் கண்விழித்தது.
தேசியம் என்கிறோம். மொழி என்கிறோம். பண்பாடு என்கிறோம். பெண்ணின் உடல் ஒரு தேசம். அதன் உறுப்பு நலனுகளிலிருந்து எழுகிறது காமத்தின் மொழி. நம்முடைய பண்பாடு எத்தனை போலியாய் இருக்கிறது. ஒரு பெண் விரும்புவது சாதியை அல்ல. மொழியை அல்ல. இனத்தையல்ல. காதலுடைய ஆணை. அடுத்தடுத்த தலைமுறைப் பெண்கள் திலகவதி, சுசித்ரா, சாரதா, பீனு படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். ஆனால் ஆண்/பெண் உறவில், பண்பாட்டில் ஏதும் மாற்றம், முன்னேற்றம், நிகழ்ந்ததா? இவர்கள் வேதவல்லியைவிட முன்னோக்கி நகர்ந்தார்களா? என்கிற கேள்வியை எழுப்புகிறது இந் நாவல்.
- கரிகாலன்
Be the first to rate this book.