வரலாறு நெடுகிலும் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் போல் மறைப்புகளுக்கும், திரிப்புகளுக்கும் வேறு எந்த இனமும் இந்தளவுக்கு உள்ளானதில்லை! ஆயினும், இம்மொழியும் இனமும் தனது உள்ளாற்றலின் காரணமாக, அனைத்தையும் சந்தித்து, தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தத் தற்காப்புப் பயணத்தின் தற்கால வடிவமாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் முதன்மைச் சிந்தனையாளராக -களப் போராளியாக விளங்கும் ஐயா பெ. மணியரசன் அவர்களின் அறிவார்ந்த செயலுக்கு வழிகாட்டக்கூடிய கட்டுரைகளின் தொகுப்பே 'இனத் தேசியம் ஏந்துங்கள்!" என்ற இந்நூல்!
இந்தியம் - திராவிடம் வளர்ச்சிவாதம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படும் தற்காலத் தமிழர்களுக்கு அவற்றிலிருந்து மீண்டு, ஒளி பெற வழிகாட்டும் நூலாக இது விளங்கும் என்பது உறுதி!
Be the first to rate this book.