இந்த நூலின் ஆசிரியர் ரேணுகா சூரியகுமார் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவர். இவருடைய கவிதைகள் கல்கி, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவருடைய கவிதை ஒன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்பது இவருடைய ரசனையான கவிதைகளுக்கு சாட்சி. இயற்கை விவசாயம் சார்ந்த சிறுகதைகளையும், கல்வி சார்ந்த கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். நான்கு திருக்குறள் அதிகாரங்களுக்கு இவர் எழுதியுள்ள புதுக்கவிதைகள் புதுமண தம்பதிகளுக்கு மட்டுமல்ல! இனிய இல்லறம் நடத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும்.
Be the first to rate this book.