இலாபம் தரும் தேனீ வளர்ப்பு – வங்கிக் கடனுதவி மற்றும் அரசு மானியத் திட்டங்கள் என்ற நூல் தேனீ வளர்ப்புப் பற்றிய முழுமையான தகவல்களை கொண்டுள்ளது. தேனீக்களின் வகைகள், அவை வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு பயன்தருகின்றன என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது. தேனீக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நமக்கு உணவுப் பொருளாகவும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சைப் பொருளாகவும் பயன்படுகின்றன. இந்நூலில் தேன் உற்பத்தி செய்யவும், தேனை பதப்படுத்தவும் மாதிரி வங்கிக் கடன் திட்டங்கள் தரப்பட்டுள்ளன. மேலும், தேன் உற்பத்திக்கு அரசு வழங்கும் மானியத் திட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.