தமிழில் மரபிலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்பும் தேர்ச்சியும் கொண்டவர் வளவ.துரையன். அவர் வளவனூரில் உருவாகி கடலூரில் நிலைகொண்ட இலக்கிய ஆளுமை. மரபுக்கவிதை, நவீன கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
அவருடைய படைப்புலகில் தினசரி வாழ்க்கையில் அவர் கண்ட அரிய தருணங்களின் காட்சிகளும் அரிய மனிதர்களின் சித்திரங்களும் நிறைந்திருக்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகர்களுக்கு, அவை மனம் தளும்ப வைக்கும் இனிய அனுபவத்தை வழங்குகின்றன.
ஒரு புனைவு நூலை அறிமுகப்படுத்துவதுபோல ஆர்வமூட்டும் எண்ணற்ற தகவல்களோடும் வாழ்வியல் அனுபவங்களோடும் சங்க இலக்கியப் பனுவல்களை புதியவாசகர்களுக்கு தொடர்ச்சியாக அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
கடலூரில் இலக்கியச்சோலை என்னும் அமைப்பை உருவாக்கி, இளைய தலைமுறையினருக்கு இலக்கியம் சார்ந்த ரசனையுணர்வு பெருகுவதற்கு ஏற்ற வகையில் நடத்திய நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை இருநூறைக் கடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
Be the first to rate this book.