இந்த நூலை வாசகர்கள் இலக்கிய விமர்சனமாகவோ, விமர்சன இலக்கியமாகவோ எப்படிப்படுகிறதோ அப்படி ஏற்றுக் கொள்ளலாம். இதிலுள்ள கருத்துக்கள் பல ஆழமும் கனமும் கொண்டவை. கலைகளை - இலக்கியத்தை நான் எப்படிப் புரிந்து கொண்டேன் என்பதற்கு விடையளிக்கும் முயற்சியாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. கருத்துக்களைக் கல்யாண வீட்டுச் சாம்பாரைப் போல் தண்ணீர் விட்டுப் பெருக்காமல் கூடியவரை சுயம்பாகவே தந்திருக்கிறேன்.
இதிலுள்ள கருத்துக்களையெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதில்லை. வளமுறையை, மரபை ஒட்டிய விவகாரங்களை, பிறந்த மேனியாகவே தந்திருக்கிறேன். யுத்த களத்து நிருபனாக, நடந்ததை நடந்தவாறே சொல்லும் சஞ்சயனைப் போலத்தான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறேனே ஒழிய, கீதா போதனை செய்யும் கீதாசாரியனாகத் தோற்றமளிக்கவில்லை.
- தொ.மு.சி.ரகுநாதன்
Be the first to rate this book.