இலக்கியப் பார்வையில் சங்க காலத் தொல்லியல்
-பா. அருண்ராஜ்
முனைவர் பா.அருண்ராஜ் திருவாரூர் மாவட்டம். குடவாசல் வட்டம் மேலராமன்சேத்தி கிராமத்தில் 25.05.1985 ஆம் ஆண்டு வேளாண் குடியில் பிறந்தவர். இவர் தொடக்கப்பள்ளி படிப்பை விக்கிரபாண்டியம் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியிலும், நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பை நன்னிலம் அரசுக ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை வரலாறு திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியிலும், முதுகலை வரலாறு கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியிலும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சிற்பத் துறையிலும் முனைவர் பட்டத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையில் பேராசிரியர் சு.இராசவேலு அவர்களின் நெறிகாட்டலில் நிறைவு செய்துள்ளார்.
2018 முதல் 2022 வரை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக வரலாறு மற்றும் சுற்றுலாவியல் துறையிலும், 2022-2025ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிலும் கவுரவ விரிவுரையாளாராக பணியாற்றியுள்ளார். 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மேற்கொண்ட மந்திரிப்பட்டினம் அகழாய்வில் கள மேற்பார்வையாளராகவும், அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மேற்கொண்ட இலந்தகரை அகழாய்வில் அகழாய்வு பொறுப்பாளராகவும் இருந்துள்ளார் பன்னாட்டு அளவில் கட்டுரைகளையும், தேசிய அளவில் 25 கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் 42 கருத்தரங்கம் மற்றும் பயிலரங்குளில் பங்கு கொண்டுள்ளார். இவரது அடுத்த படைப்பான 'தொல்லியல் நோக்கில் சங்க கால அரசு உருவாக்கம்' என்ற நூல் வெளிவர உள்ளது.
Be the first to rate this book.