மனநல ஆலோசகரான ஜான்சி ஷஹி வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிகாட்டும் வகையில், லூயிஸ் ஹே-யின் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவர் பெங்களூரு க்றைஸ்ட் யுனிவர்சிட்டியில், மாணவர் மன நல ஆலோசகராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் பட்டதாரியான இவர், தன்னைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும், மனிதர்களின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்வதிலும் இருந்த ஆர்வத்தினால், கவுன்சிலிங், சைக்கோதெரபி மற்றும் யோகாவில் முதுநிலைப் பட்டம் பயின்றவர். மனத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்வதிலும், மனிதர்களின் குணாதிசயங்கள் பற்றித் தெரிந்துகொள்வதிலும் இவருக்குப் பேராவல் வாழ்க்கையையும், அதன் படிநிலைகளையும் மிகவும் நேசிப்பவர் வாழ்க்கையின்மீது தீராக்காதலும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்.இது இவருடைய முதல் புத்தகம்!
Be the first to rate this book.