முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள் ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!
குமரி தொடங்கி இமயம் வரைக்கும் அமைந்த உன்றன் அளவும் குறைந்தது தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.
வாழ்விற் புதுமை மலரக் கண்டோம்! தாழாத் தலைமுறை தழையச் செய்யும் வாழைக் கன்றுகள் வளரக் கண்டோம் வாழ்க அன்னாய் வாழ்க! வாழ்க!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.