ஒரு புல்லின் மதிப்பு எவ்வளவு உயர்ந்தது. இதை உணர்வதற்கு ஒருவர் பாலைவனத்தில் வாழ்த்திருக்க வேண்டும்.ஒவ்வொருவர் வாழ்விலும் மதிப்பீடு (values) என்பது முக்கியமானது. ஒரு சகாப்தம் என்பது பல தடைகளைக் கடந்து வந்தடைவது. மேலும் புதிய மதிப்பீடுகளால் உருவாவது. ஒரு சமூகம் கற்பது. அறிவைப் பெறுவதற்கு மட்டும் அல்ல மதிப்பீடுகளைப் பெறுவதற்குமே. பண்டைய பேரரசுகள் பல அழிந்ததற்கு வெளியிலிருந்து நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள் மட்டுமே காரணம் அல்ல, மாறாக அதற்குள்ளேயே காணப்பட்ட ஊழல், அறவீழ்ச்சி போன்ற பலவீனங்களே. கொள்கைகள், மதிப்பீடுகள் சரியும் இடத்தில் கலாச்சாரத்தின் மரணம் நிகழ்கிறது. 'உங்கள் நம்பிக்கைகள் உங்கள் எண்ணங்களாக மாறும், உங்கள் எண்ணங்கள் உங்கள் வார்த்தைகளாக மாறும், உங்கள் வார்த்தைகள் உங்கள் செயல்களாக மாறும், உங்கள் செயல்கள் உங்கள் பழக்கங்களாக மாறும், உங்கள் பழக்கங்கள் உங்கள் மதிப்புகளாக மாறும், உங்கள் மதிப்புகள் உங்கள் விதியாக மாறும்." என்கிறார் உலகுக்கு அஹிம்சை, சத்தியம் போன்ற மதிப்புகளை வழங்கிய மகாத்மா அவ்வகையில் 'இடர் ஆழி நீங்குக' தமிழ்ச் சமூகத்துக்குப் புதிய மதிப்பீடுகளை அளிக்கிற நூலாகத் திகழ்கிறது. உங்கள் மதிப்பை அறிந்து. முடிவுகளை எடுக்கத் தடுமாறும் இருளில், சிறிய அகலை ஏற்றி வைக்கிறார் கரிகாலன்.
Be the first to rate this book.