சொந்த வீடு, சொந்த நிலம் என்பது பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவு. செலவுகளை மிச்சம் பிடித்து, சிறுகச் சிறுகச் சேமித்து, தனக்கென ஒரு சொந்த இடம் வாங்கி அதில் குடியேறுவதன் சந்தோஷம் அளவிட முடியாதது.
ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு, சொந்த இடம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. சட்டச் சிக்கல்கள், வாரிசுப் பிரச்சினை, வில்லங்கம் உள்ள நிலங்களையோ, அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களையோ, கட்டடங்களையோ தவறான வழிகாட்டுதலின்படி வாங்கிவிட்டு மனநிம்மதியை இழக்கிறார்கள்.
இனி அந்தக் கவலை வேண்டாம்.
நீங்கள் நிலமோ கட்டடமோ வாங்கும்போது கவனிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய பல முக்கிய வழிமுறைகளையும் அரசாங்க விதிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம்.
எளிமையாகவும் சட்ட ரீதியாகவும் நீங்கள் சொத்துகளை வாங்குவதற்குச் சரியான பாதையைக் காட்டும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல.
நா.கோபாலகிருஷ்ணன்
சொந்த ஊர் திண்டுக்கல், படித்தது இளங்கலை பொறியியல் (CIVIL ENGINEERING). வங்கி மற்றும் நிதித்துறையில் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். முன்னணி வீட்டுக்கடன் நிறுவனம் ஒன்றின் தமிழ்நாடு தலைமைப்பொறுப்பில் இருந்தவர். கடந்த ஒன்பது வருடங்களாக, வங்கிகளுக்கான கட்டட மதிப்பீடு மற்றும் கட்டடம் கட்டும் நிறுவனத்தினை திண்டுக்கல்லில் நடத்தி வருகிறார். கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போட்டித்தேர்வுகள் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஒரு சிறிய நிறுவனத்தின் உரிமையாளர்.
Be the first to rate this book.