1967-ஆம் ஆண்டு தி.மு.கழகம் முதல்முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ் நிலம், தமிழ்நாடு ஆனது. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வருகையால், தமிழ்நாட்டு நிலப்பரப்பில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றங்கள், திட்டங்களாக, நிறுவனங்களாக நிலைபெற்று இருக்கின்றன. மேம்பாலங்கள், நினைவுமண்டபங்கள், தொழிற்சாலைகள், பொருட்கள் எனப் பல வகை மாதிரிகளில் கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள், கட்டமைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. காலப்போக்கில் அந்தக் கட்டமைப்புகள் நிலவியல் அடையாளங்களாக, சுற்றுலாதலங்களாக மாறி, மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன. அத்தகைய கட்டமைப்புகளை வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதுதான் 'இடம் பொருள் கலைஞர்'.
Be the first to rate this book.