இந்தக் கதைகள் தனிமையைப் பேசுகின்றன. உலகத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, குடும்பத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, தன்னைத் தானே புரிந்துகொள்ள முடியாதவர்களின் தனிமை என்று கதைகள் முழுவதும் தனிமை விரவிக் கிடக்கிறது.
- இரா.முருகவேள்
கா.ரபீக் ராஜா. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1986ஆம் ஆண்டு பிறந்தவர். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தனது இளங்கலை வணிகப்பொருளாதாரம் படிப்பை முடித்தார்.
இவரது எழுத்துகள் சொல்வனம். கீற்று, திண்ணை. வாசகசாலை, அந்திமழை, தி இந்து, நோசன்பிரஸ் போன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி நல்ல கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. தற்கால இலக்கிய சூழலில் இயங்கி வருகிறார்.
காரைக்குடியில் நண்பர்களுடன் இணைந்து சம்பை ஊற்று வாசகர் வட்டம் நடத்தி வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.