இந்நூலின் ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியரின் கடின உழைப்பும், ஹோமியோ மருத்துவத்தின் மீதான அவரது ஆழமான பற்றும், பளிச்சென வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்நூல் சாதாரண மருத்துவர்களை சிறந்த மருத்துவர்களாக உயர்த்துவதற்கான கையேடாக மட்டுமல்லாமல் ஹோமியோபதி மருத்துவ முறை பற்றி எதுவுமே அறியாதவர்களையும் ஈர்க்கும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கிறது. அந்த அளவிற்கு ஆழமான கருத்துக்களை, எளிமையாக, எல்லோருக்கும் புரியும் வகையில் அற்புதமாக படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வாசகராக நுழைந்த நான் இந்நூலை படித்து முடித்தபின் ஹோமியோபதியின் மேல் நம்பிக்கை மலர்ந்தது என்பதே இந்நூலின் சிறப்புக்கு சான்று.
-மு.சங்கையா
Be the first to rate this book.