ஒரு இந்தியனின் மனக் கட்டமைப்பை உருவாக்கவல்ல வலிமையைப் பெற்றிருக்கும் புராண, இதிகாசங்களை, குறிப்பாக பகவத்கீதையை, படிப்பறிவு மறுக்கப்பட்ட , பகுத்தறிவு உருவாக்கப் படாத மக்களிடம் பலவடிவங்களில் திணித்து அவனது சிந்தனையை பாழ்படுத்தி, ‘இந்து இந்தியா’ என்னும் கட்டமைப்பை செயற்கையாக உருவாக்கியதில் கீதா பிரஸ் முதன்மையானது. இந்துத்துவ மார்வாடி கும்பலின் நோக்கம் – அவர்களுக்கான கட்டமைப்பு, அதிகார வர்க்கம், பொருளியல் சுரண்டல் ஆகியவற்றை நிறுவி பராமரிப்பது மற்றும் தொடர்ந்து விரிவுபடுத்துவது என்பதே. இக்கூற்று மிகையல்ல என்பதை கடந்த காலம் முதல் தற்கால மோடி காலம் வரை உள்ள சம்பவங்களைக் கண்காணித்தாலே போதும், உண்மை விளங்கும்.
Be the first to rate this book.