அலீ ஷரீஅத்தியின் இந்நூல், ஹஜ்ஜின் ஆழ்ந்த தத்துவங்களை எடுத்துரைக்கும் ஒரு முன்னோடியான ஆக்கம்.
ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு முன்பு அதன் சட்டங்களையும் வழிமுறைகளையும் கற்றுக்கொள்வது எத்துணை முக்கியமோ அதைவிட முக்கியம் ஹஜ்ஜின் ஆன்மாவைப் புரிந்துகொள்வது. அதற்கு இந்நூல் நிச்சயம் உதவும்.
இதில் அவர், இப்றாஹீம்போல் வாழ; ‘நான்’ என்கிற எண்ணத்தைத் தூக்கியெறிய; ‘இறைவனின் வலக்கரத்துடன்’ பைஅத் செய்துகொள்ள; பல கடவுள்துவத்தை நிரந்தரமாகக் கைவிட்டு ஓர் உம்மத்தாக மாற; திசையைத் தெரிந்துகொள்ள; அறிவிலிருந்து தன்னுணர்வுக்கான, தன்னுணர்விலிருந்து காதலுக்கான இயக்கத்தைப் புரிந்துகொள்ள; தாகூத்தின் கரங்களிலிருந்து வாளைப் பிடுங்கும் தைரியத்தைப் பெற; ‘நமது இஸ்மாஈலை’ தியாகம் செய்வதற்கான விருப்பத்தைப் பெற; சர்வாதிகாரம், சுரண்டல், ஏமாற்றுதல் என்ற மூன்று தலை கொண்ட இப்லீஸுடனான போரை ஒருபோதும் நிறுத்தாமலிருக்க நம்மை அழைக்கிறார்.
Be the first to rate this book.