கச்சிதமான உடலமைப்பு, கட்டுக்கோப்பான வடிவம். உறுதியான உடல் தோற்றம், இளமைத் துடிப்போடு எப்போதும் இயங்க விரும்புகிறீர்களா? முதுமையைத் தள்ளிப் போட விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், கூடுதல் உடற் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றன உங்களை அண்டாமல் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையா? அல்லது அவை போன்றன ஏற்கெனவே இருந்தால் கட்டுக்குள் வைத்திருப்பது உங்கள் விருப்பமா? அவற்றையெல்லாம் நிறைவேற்றும் மந்திரச் சாவி உடற்பயிற்சி மட்டும்தான். அந்தச் சாவிதான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம்!
இளமைப் பொலிவு, நோய்களற்ற வாழ்வு இவற்றுக்கு ஆசைப்படாதவர்களும் இருக்கிறார்களா என்ன? அவை அனைத்தையும் ஒருசேர அளிக்கக்கூடியதுதான் உடற்பயிற்சி. அப்படிப்பட்ட அரியசெயல்பாடான உடற்பயிற்சியை அனுதினமும் மேற்கொள்ளப்புதிகாக முயல்பவர்களுக்குத் தயக்கமும் சோம்பலும் இருப்பதென்னவோ நிஜம்! அந்த மனத் தடைகளைத் தகர்த்து, உடற்பயிற்சிக் கூடத்துக்கு ஆர்வமுடன் நீங்கள் நாடிச் செல்ல இந்த நூல் வழிகாட்டும்.
வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தபடியே உரிய உடற்பயிற்சிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும் எளிமையான பயிற்சிகள் பல உண்டு; அவற்றையும் இந்த நூல் அறிமுகப்படுத்தும்.
பல வித உடற்பயிற்சிக் கருவிகள் பற்றிய விவரங்கள், உருவான சுவாரசியமான வரலாறுகள், படிப்படியாக அவை மேம்பாடு அடைந்த விவரங்கள், கண்டுபிடித்தவர் விவரம், வரலாற்றுப் பின்னணி, கருவியை முறையாகக் கையாளும் விதம் ஆகியனவும் எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.
எந்தெந்த உடற்பயிற்சிக் கருவியினால் உடலின் எந்தப் பகுதி வலிமை பெறும் என்பதையும் பயிற்சியின்போது செய்ய வேண்டியன மற்றும் தவிர்க்க வேண்டியன பற்றியும் துல்லியமாக இந்த நூல் பேசும்.
Be the first to rate this book.