ஹைக்கூவின் உயர்நிலை முரண் தான் ஒவ்வொரு ஹைக்கூவிலும் குறிப்பிட்ட ஒரு பொருளினை நேரடியாக காணலாம். அதே சமயம் அதன் தனித்தன்மையையும், பிரிந்து நிற்கும் போக்கும் சிதையாமல் மற்றுமொரு பொருளும் அதில் புலப்படும். அதே போல நிறைய ஹைக்கூக்கள் குண்டு துளைத்த கண்ணாடியில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று
அசையும் மரக்கிளை மேலும் கீழுமாக பறக்கும் வண்ணத்துப்பூச்சி
இது போன்ற ஹைக்கூக்களால் நிரம்பிய அற்புதமான தொகுப்பாக கவிஞர் தா. பிரபு பாரதி தமது முதல் நூலான 'குண்டு துளைத்த கண்ணாடி' நூலினை கொண்டு வந்துள்ளார். இதில் ஹைக்கூவோடு நிறைய சென்ரியூக்களும் கரம் பிடித்து சிறப்பாக உள்ளன.
- பல்லவிகுமார்
Be the first to rate this book.