பெரும்பாலான மலைகளின் பெயர் தெரிவதில்லை. அப்படித்தான் இந்தக் கோத மலை தெரிந்திருக்கவில்லை. அம்மலையின் கீழே எத்தனையோ மனிதர்களின் வாழ்வை பற்றி தெரிந்திருக்கவில்லை. கண்ணன் என்றொரு கவிஞன் கோத மலையிலிருந்து வந்தவன். அங்கு தான் அவன் பிள்ளைப் பிராயம் கழிந்திருந்தது. மருதநில மனிதர்களின் வாழ்வியலை தன் கவிதைகளின் வழியாய் மிக நேர்மையாய் துயரங்களாய் வலிகளாய் தந்திருக்கிறான். அப்பாவியான மனிதரின் குரல்களை சோகங்களை சொல்ல முடியாத துக்கங்களை சொற்களின் வழியே கவிதையாக்கி தந்திருக்கிறான். அவன் கவிதையின் வழியே பரந்து விரிந்த வாழ்வின் அத்துணை அனுபவங்களையும் தன் சுயத்தில் இருந்து எழுதிப் பார்த்திருக்கிறான். கோத மலையை இனித்தான் பார்க்க வேண்டும் போலுள்ளது. கவிஞருடன் ஒரு எட்டு போய் வரலாம் வாருங்கள் நண்பர்களே..
- அய்யப்ப மாதவன்
Be the first to rate this book.